கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்குஸ் லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். அதேநேரத்தில், பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்தியா முழுவதும் எந்த கல்லூரியிலும், எந்த பல்கலைக்கழகத்திலும் பணிபுரிய முடியும்.படிக்கும்போதே தயார்படுத்த முடிவு தற்போது ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. முதுகலை பட்டப் படிப்பு முடித்து ஒருசில ஆண்டுகள் கழித்த பின்னரே இத்தகைய தகுதித்தேர்வுக்கு தயாராகிறார்கள். இந்த நிலையில், முதுகலை படிப்பு மாணவர்கள் படிக்கும்போதே அவர்களை ஸ்லெட், நெட் தகுதித்தேர்வுகளுக்கு தயார்படுத்த உயர்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முதுகலை படிப்பில் ஸ்லெட், நெட் தேர்வு பாடத்திட்டங்களை சேர்க்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.பாடத்திட்டத்தில் சேர்ப்பு ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவர உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்துள்ள நிலையில், முதுகலை படிப்பில் ஸ்லெட், நெட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை சேர்ப்பதில் எவ்விதமான பிரச்சினையும் எழாது. மேற்கண்ட தகுதித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை முதுகலைப் படிப்பின் இறுதி ஆண்டு செமஸ்டர் பாடத்திட்டத்தில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பி.எட். மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட். பாடத்தில் தகுதித்தேர்வு குறித்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment