Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 12 December 2013

உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவில்லை.

உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,063 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் 3 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ளலேடி வெலிங்டன் கல்வியியல் நிறுவனம் ஆகியவற்றில் நவம்பர் 25 முதல்டிசம்பர் 6 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்காக 14,600 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களி
ல் 22 சதவீதம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது:

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களின் விவரங்களைச் சரிபார்க்கும்பணி அடுத்து தொடங்கப்படவுள்ளது.இந்தப் பணி 10 நாள்கள்வரை நடைபெறும். அதன்பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு பெரும்பாலும் ஜனவரி மாதம் இருக்கும் என அந்தவட்டாரங்கள் தெரிவித்தன.

சான்றிதழ் சரிபார்ப்பில் உரிய கல்வித் தகுதிக்குப் பிறகானபணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 15மதிப்பெண் வரை வழங்கப்படும்.கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண் வழங்கப்படும்.பி.எச்டி. படிப்புக்கு 9 மதிப்பெண்ணும், எம்.பில் மற்றும் நெட் அல்லது ùஸட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 6 மதிப்பெண்ணும், முதுநிலைப் பட்டம் மற்றும் நெட் அல்லது ùஸட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5மதிப்பெண்ணும்வழங்கப்படும்.மொ
த்தம் 24 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்ணுக்கு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் மொத்தம் 34 மதிப்பெண்ணுக்கு தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் இருக்கும்.

No comments: