Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 24 September 2012

TRB - TET 2012 SUP.


செப்டம்பர் 24 முதல் டி.இ.டி மறுதேர்வு விண்ணப்பங்கள்
   டி.இ.டி., மறுதேர்வுக்கான விண்ணப்பங்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகின்றன.


   முதன்மை கல்வி அலுவலர் சிவா தமிழ்மணி தனது அறிவிப்பில், "அக்டோபர் 14ம் தேதி, டி.இ.டி., மறுதேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும்.

   பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 28ம் தேதி மாலை 5:30க்குள், சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே சமர்ப்பிக்க வேண்டும்" என, தெரிவித்துள்ளார்.

   எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 250 ரூபாய் கொடுத்தும், இதரபிரிவினர் 500 ரூபாய் கொடுத்தும், விண்ணப்பங்களைப் பெறலாம்.

டி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள்
   டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே, "கிலி&' அடைந்துள்ளனர்.


   ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும், அக்டோPஅர் 3ம் தேதி, மறுதேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்கக்கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

   அதேபோல், "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே. பணி நியமனம் செய்வதற்கு, இதுவே இறுதித் தேர்வு கிடையாது. எனவே, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கு தனி வழிமுறைகளை வகுக்க வேண்டும்&' என, வலியுறுத்தி, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

   டி.ஆர்.பி., முடிவு: "மறுதேர்வில், புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதற்காக 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனால், அக்டோPஅர் 3ம் தேதி நடக்க இருந்த தேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்ற முடிவை, மனுவாக, டி.ஆர்.பி., சமர்ப்பித்தது. 

   அதேபோல், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து, அரசு எடுத்துள்ள முடிவையும், மனுவாக டி.ஆர்.பி., சமர்ப்பித்தது. 

   இதை ஏற்று, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

   இக்குழு, அடுத்தவாரம் சென்னையில் கூடி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, முடிவெடுக்கவுள்ளது.

    குழு எடுக்கும் முடிவை, அரசுக்கு தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற்றதும், உடனடியாக அரசாணை வெளியிடப்படும். குழு, எந்த வகையான வழிமுறைகளை உருவாக்கப்போகிறது என, தெரியாமல், தேர்ச்சி பெற்றவர்களும், இனி தேர்வை எழுதப்போகும் தேர்வர்களும், "கிலி" அடைந்துள்ளனர். 

   நேர்முகத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தி, அதற்கு தனி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுமா என, தெரியவில்லை. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் என்ற முறை வந்தால், அது முறைகேடுகளுக்கு வழி வகுத்துவிடும். எனவே, உயர்மட்டக்குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கப் போகிறது என்பதை அறிய, தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

No comments: