Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 14 July 2015

தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையம்: பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல்

தேசிய ஆன்-லைன் கல்வி உதவித் தொகை இணையத்தில் பல்கலைக்கழகங்கள் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பரவலாக விளம்பரப்படுத்துமாறும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் விரைவாகவும், நேரடியாகவும் சென்றடையும் வகையில், தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையத்தை (http:scholarships.gov.inlogin.go) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது.
இந்த இணையம் மூலம் சமர்ப்பிக்கப்படும் மாணவரின் விண்ணப்பம், முதலில் அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு பின்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனவே, இந்த இ-கல்வி உதவித் தொகை இணையத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். 
மாணவர்களின் விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே பரவலாக விளம்பரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்கள் எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: