சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.தங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எம்.ஏ. (ஆங்கிலம், அரசியல் அறிவியல்), எம்.எட்., பிஎச்.டி. பட்டங்களைப் பெற்றுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வி ஆராய்ச்சி மைய இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும், மதுரை காமராஜர் பல்கலை. கல்விக் குழு, பேரவைக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை., தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. தஞ்சை தமிழ்ப் பல்கலை. ஆகியவற்றின் கல்விக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்: இதுபோல், வேலூர் திருவள்ளுவர் பல்கலை. புதிய துணைவேந்தராக கே.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்சி., எம்.ஃபில்., பிஎச்.டி., டி.எஸ்சி. பட்டங்களைப் பெற்றுள்ளார். கோவை பாரதியார் பல்கலை. ஆராய்ச்சி மேம்பாட்டு மைய இயக்குநராக (பொறுப்பு) பணியாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment