கால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை, வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பி.வி..எஸ்சி படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 6, 7-ம் தேதிகளில் நடைபெறும். பி.டெக் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
199.5 கட் ஆப் மதிப்பெண் பெற்று சேலத்தைச் சேர்ந்த மாணவர் சுரேஷ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பி.டெக் உணவு தொழில்நுட்பத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரேவதி 199.25 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
பி.டெக்., பால் தொழில்நுட்பத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயா 198.75 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
பி.டெக்., கோழின உற்பத்தியில் விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா முதலிடம் பிடித்துள்ளார்.
www.tanuvas.tn.nic.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தர வரிசைப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் திலகர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment