Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 11 June 2015

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய அழைப்பு

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும், 2015-16ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளில் செய்முறை பயிற்சியில் பங்கேற்காத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. நேற்று முதல் பெயர் பதிவுப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
பதிவு பணிகள் முடிந்த பின், மாவட்ட கல்வி அலுவலரால் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்தமையங்களுக்கு தொடர்ந்து சென்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்புகளில், 80 சதவீத வருகை பதிவு இருக்கவேண்டியது கட்டாயம்.
இதற்கான விண்ணப்பத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments: