Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 28 May 2015

சி.பி.எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: 97.32 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்தாண்டு சி.பி.எஸ்.சி  பத்தாம் வகுப்பு தேர்வில் 97,32 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மண்டல அளவில் திருவனந்தபுரத்தில் 99,77 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். சென்னை மண்டலத்தில் 99.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். சென்னை மண்டலத்தில் 1.7 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbse.results.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments: