தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
மறுகூட்டல், விடைத்தாளின் நகல்கள் பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறு கூட்டல் செய்வதற்கு மொழி பாடங்களுக்கு தலா ரூ.305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ.205-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு வரும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment