Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 3 April 2015

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் உயர்வு

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் இந்த நிதியாண்டில் 9.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு சுகன்யா சம்ருதி என்னும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் கணக்கு தொடங்கி 21 வருடம் வரை சேமிப்பில் ஈடுபடலாம்.
இதற்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் இந்த நிதியாண்டில் இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் 9.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம், 9.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலக்சாண்டர் கூறும்போது, “செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 340 கணக்குகளும், தமிழகத்தின் மத்திய மண்டலத்தில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 054 கணக்குகளும், தெற்கு மண்டலத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 540 கணக்குகளும், மேற்கு மண்டலத்தில் 93 ஆயிரத்து 901 கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் இந்த நிதியாண்டில் 9.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமானவர்கள் பயனடைவார்கள்” என்றார்.

No comments: