உயர் கல்வித் துறையின் கீழுள்ள திருச்சி, கோவை மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக தஞ்சாவூர் மற்றும் தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களின் கல்லூரிகளும், கோவை மண்டல கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களின் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு மண்டலங்களிலும் அதிக கல்லூரிகள் இடம்பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டலம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இந்த அலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும்.
கோவை மண்டல அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தருமபுரியில் புதிதாக ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இந்த அலுவலகம் தருமபுரி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
No comments:
Post a Comment