சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியியல் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக துறை, இணைப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, சேர்க்கைக்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
•GATE 2014 பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல்/தொழில்நுட்ப படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர்.
• அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் TANCET 2014ல் நுழைவுத்தேர்வில் பங்கேற்பது அவசியம்.
விண்ணப்ப படிவ கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.500ம், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாணவர்களுக்கு ரூ.250ம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தபால் மூலம் விண்ணப்பங்களை பெற விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.700ம், மற்ற பிரிவினருக்கு ரூ.450ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர் ஆன்லைனில் பதிவு செய்வது அவசியம். ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற ஜூலை 24ம், பல்கலை வளாகத்தில் விண்ணப்பங்களை பெற ஜூலை 25ம் கடைசி நாளாகும்.
கூடுதல் தகவல்கள் அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment