மத்திய பணியாளர் தேர்வானையம் நடத்தும் சிவில் சர்விஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்(சிஎஸ்ஏடி), ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் ஆகிய பணிகளில் சேர யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிஎஸ்ஏடி தேர்வை நடத்தி வருகின்றது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே சிஎஸ்ஏடி தேர்வின் வினாத்தாள் அமைப்பை சுலபமாக மாற்றியமைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
சிஎஸ்ஏடி வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்படுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய வடிவமைப்பில் இந்தி மொழியில் கேள்விகள் இடம் பெறுவதில்லை. அதனால், இந்தி பாட மொழியாக எடுத்து படித்த மாணவர்களுக்கு இது, பெரிதும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
எனவே, சிஎஸ்ஏடி கேள்வித்தாளின் அமைப்பு முறையை மாற்ற கோரியும், அதே சமயம் தேர்வை சுலபமாக கையாளும் வகையில் வினாத்தாளை மாற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை ஏற்ற, அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீஸ் தேர்வின் அமைப்பை மாற்றி அமைத்து, ஆகஸ்ட் 24ம் தேதிக்கு தேர்வை ஒத்தி வைக்க முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment