Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 21 July 2014

வெளிமாநில ஆசிரியர் டிப்ளமோ: மதிப்பீடு செய்யும் தடை நீக்கம்

வெளிமாநிலங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படித்தவர்களின் பட்டயச் சான்றிதழ்களை மதிப்பீடு செய்வதற்கான தடையை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2008-09-ஆம் கல்வியாண்டில் வெளிமாநிலங்களில் ஆசிரியர் டிப்ளமோ படித்தவர்களுக்கு பட்டயச் சான்று மதிப்பீடு செய்வது தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது தமிழகப் பாடத்திட்டதோடு ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலப் பாடத்திட்டங்களை ஒப்பீடு செய்ததில், அந்தப் பாடத்திட்டங்கள் தமிழகப் பாடத்திட்டத்துக்கு இணையானது என வல்லுநர் குழு பரிந்துரைத்தது.
அதனடிப்படையில், 2008-09-ஆம் கல்வியாண்டிலும், அதன்பிறகும் அந்த மாநிலங்களில் படித்த மாணவர்களுக்கு, அவர்களின் டிப்ளமோ படிப்பு தமிழக படிப்புக்கு இணையானது என சான்றிதழ் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2008-09-ஆம் கல்வியாண்டிலோ அல்லது அதற்குப் பிறகோ ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் ஆசிரியர் டிப்ளமோ முடித்த மாணவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் தங்களது சான்றிதழ்களை மதிப்பீடு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: