கோவையில் தமிழ்நாடு மேல் நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. அதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.நேரு, பொருளாளர் செங்கோட்டுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் குறித்து மாவட்டத் தலைவர் செந்தில்குமார் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
அனைத்து தொழிற்கல்வி ஆசிரி யர்களுக்கும் 50 சதவீதம் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். அரசாணை 263-ல் 2013-ம் ஆண்டில் இருந்து உள்ள பணப்பயனை 2011 என மாற்றி முதல் தர ஊதியமாக ரூ.5400 வழங்க வேண்டும். மாற்று பாடத்தில் பட்டம் பெற்ற பொறியியல் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்து ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தேர்ச்சி பெற்ற நாளுக்கு அடுத்த நாள் முதல் பணப்பயன் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 271 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், தகுதி குறைவான சுமார் 100 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை தொழிற் கல்வி ஆசிரியர்கள் எனப் பெயர் மாற்றம் செய்து காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தொழிற்கல்வி ஆசிரி யர்களுக்கும் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் உள் ளிட்ட பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்களை வலியுறுத்தி தமிழ் நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 9-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment