தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் 10 பாலிடெக்னிக்குகள், 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ. 80 லட்சம் செலவில் "இ-யந்த்ரா' என்ற ரோபாடிக்ஸ் ஆய்வகங்கள் நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. விவாதத்துக்குப் பின்னர் புதிய அறிவிப்புகளை அமைச்சர் பி. பழனியப்பன் வெளியிட்டார்.
* மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் 10 அரசு, அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ. 80 லட்சத்தில் "இ-யந்த்ரா' ரோபாடிக்ஸ் ஆய்வகங்கள் நிறுவப்படும்.
* 20 பாலிடெக்னிக்குகள், 10 பொறியியல் கல்லூரிகளில் ரூ. 30 லட்சத்தில் காணொலிக் காட்சி ஒளிபரப்பு மையம் (விடியோ கான்ஃபரன்ஸிங்) அமைக்கப்படும்.
* பிரிட்டிஷ் கவுன்சில் தயாரித்துள்ள வேலை தேடுவோருக்கான "அனிமேட்டட் விடியோ' 350 பொறியியல் கல்லூரிகளுக்கு ரூ. 3.5 லட்சத்தில் வழங்கப்படும்.
* பாலிடெக்னிக் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் வகையில் 140 பாலிடெக்னிக்குகளுக்கு ரூ. 6.3 லட்சம் செலவில் இருமொழி பாடப் புத்தகங்கள், ஒளி-ஒலி குறுந்தகடுகள் வழங்கப்படும்.
* 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ. 60 லட்சம் செலவில் 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி சாதனங்கள் நிறுவப்படும்.
* அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ. 65 லட்சம் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
* கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன திருச்சி வளாகம் ஆகியவற்றில் மென்பொருள் இன்குபேஷன் (அடைகாக்கும்) மையம் நிறுவப்படும்.
* மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வியாண்டில் மாலை நேரக் கல்லூரி தொடங்கப்படும்.
No comments:
Post a Comment