பி.ஆர்க்.படிப்பில் சேர சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது.
இக்கலந்தாய்வு ஜூலை 23ம் தேதி வரை நடைபெறுகிறது.சிறப்பு பிரிவினருக்கு நேற்று நடைபெற்ற ஒற்றைச்சாளர கலந்தாய்வில் மொத்தமுள்ள 1,669 இடங்களுக்களில், முதல் நாளில் 370 பேர் அழைக்கப்பட்டனர்.
இவர்களில் 253 பேர் இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கை கடிதம் பெற்றனர். 106 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 11 பேர் கலந்தாய்வில் பங்கேற்றும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
இன்றும் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகின்றது. கலந்தாய்வு குறித்த தகவல்கள் அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment