Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 25 July 2014

+2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூலை 26ல் விடைத்தாள் நகல் வெளியீடு

கடந்த ஜூன்/ஜூலை.,யில் பிளஸ் 2 தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் ஜூலை 26ம் தேதி காலை 10.00 மணி முதல் விடைத்தாள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் student.hse14rtrv.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களில் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retolling/Revaluation  என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூலை 30 காலை 10.00 மணி முதல் ஆகஸ்ட் 4 பிற்பகல் 1.00 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

No comments: