Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 23 July 2014

பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு ஜூலை 28ல் துவக்கம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு ஜூலை 28ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு இடைத் தேர்வுகளும் பொது வினாத்தாளை கொண்டு நடத்தப்படுகிறது. 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து வைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரே தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுகிறது.
இதில் பிளஸ் 2 வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு ஜூலை 28ம் தேதி துவங்குகிறது. அன்று காலை இயற்பியல், பொருளியல், தட்டச்சு மற்றும் கணினி இயக்கம் ஆகிய தேர்வுகளும், மதியம் தமிழ் தேர்வும் நடத்தப்படுகிறது. ஜூலை 30ம் தேதி காலை வேதியியல், கணக்கு பதிவியல், புள்ளியியல், தொழிற்கல்வி ஆகிய தேர்வுகளும் மதியம் ஆங்கில தேர்வும் நடத்தப்பட உள்ளது.
ஜூலை 31ம் தேதி காலை வரலாறு, கணிதம், வணிக கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், புட் மேனேஜ்மென்ட் அண்டு சைல்டு கேர், ஆஃபிஸ் மேனேஜ்மென்ட் ஆகிய தேர்வுகளும், மதியம் கணினி அறிவியல், உயிர் வேதியியல், மனையியல், செவிலியர், இங்கிலீஸ் கம்யூனிகேசன், அரசியல் அறிவியல், புள்ளியியல், உணவும் ஊட்டச்சத்தும் உள்ளிட்ட பாடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி காலை உயிரியியல், தாவரவியல், வணிகவியல், பவுண்டேசன் சைன்ஸ் ஆகிய தேர்வு நடக்கிறது.
பத்தாம் வகுப்புக்கு ஜூலை 28ம் தேதி காலை தமிழ் பாடமும், மாலை அறிவியல் பாடமும், ஜூலை 30ம் தேதி காலை ஆங்கிலம், மாலை சமூக அறிவியல், ஜூலை 31ம் தேதி காலை கணித பாட தேர்வு நடக்கிறது.

No comments: