செவிலியர் உதவியாளர் பயிற்சிக்கு ஆகஸ்டு 1 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2014-15-ம் ஆண்டுக்கான செவிலியர் உதவியாளர் பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
செவிலியர் உதவியாளர் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 32 வயதுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 12 மாதங்கள். தமிழிலேயே பயிற்றுவிக்கப்படும். மாதம் ரூ.75 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
தண்டையார்பேட்டை, சென்னை-600081-ல்
உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை, ரூ.50 பணமாகச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்டு 1 முதல் அக்டோபர் 31 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப் பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.10.2014 மாலை 4 மணி வரை. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment