Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 5 June 2014

ஆதரவற்ற குழந்தைகள், இலவசமாக இல்லத்தில் தங்கி கல்வி பயில அரியவாய்ப்பு

சிதம்பரம் அருகே கிரீடு தொண்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லத்தில், இலவசமாக ஆதரவற்ற குழந்தைகள் தங்கி கல்வி பயிலலாம்.

தாய், தந்தையை இழந்த குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைகள், மகன், மகளால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்கள் ஆகியோருக்கு சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை- புதுச்சத்திரம் மெயின் ரோட்டில் சாலிக்கண்டு தைக்கால் எனுமிடத்தில் தமிழகஅரசின் நிதி உதவியோடு கிரீடு தொண்டு நிறுவனம் மூலம் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இந்த இல்லத்தில் புதிதாக 25 ஆதரவற்ற ஆண் குழந்தைகள் சேர்ந்து தங்கி கல்வி பயின்று பயன்பெறலாம். குழந்தைகள் இல்லத்தில் தங்குவதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. சிறப்பான ஆசிரியர்களை கொண்டு காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் இல்லத்திலிருந்து பள்ளிகளுக்கு சென்று வர இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.

சிறப்பான உணவு, குழந்தைகள் நன்றாக படிக்க அமைதியான இடம், மருத்துவவசதி, பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. மேற்கண்ட இல்லத்தில் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள ஆதரவற்ற ஆண் குழந்தைகள் (9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) தங்கி அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு சென்று கல்வி பயிலலாம்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கிரீடு முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்ல ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பையன் தெரிவித்துள்ளார். தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்: 91500 79597.

No comments: