பஞ்சபூதங்களில் நிலம், நீர், காற்று இன்று பெருமளவில் மாசடைந்து வருகிறது.
பூமியின் 20 சதவீத ஆக்ஸிஜனை உருவாக்கி, உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது கடந்த ஆண்டில் மட்டும் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
காற்று மாசுபாடினால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் இறப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி பல வகையிலும் சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1973-ம் ஆண்டு முதல் ஐநா சபை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடம் ஸ்மித் பிறந்த நாள்
பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆடம் ஸ்மித். ஸ்காட்லாந்தில் உள்ள கரிக்கால்டி நகரில் பிறந்த ஆடம் ஸ்மித், அறநெறி உணர்வுகள் பற்றிய கோட்பாடு என்ற நூலை முதன் முதலில் வெளியிட்டு அறிஞர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
எனினும், உலகம் முழுவதும் அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது, 1776-ம் ஆண்டு அவர் வெளியிட்ட "நாடுகளின் செல்வம்" என்ற நூல்தான்.
நிலம் தான் முதன்மையான பொருள் வள ஆதாரம் என்ற எண்ணப்பட்டு வந்த நிலையில், உழைப்புதான் அடிப்படை என வலியுறுத்தினார் ஆடம் ஸ்மித்.
சந்தை என்ற அமைப்பு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை முதலில் உணர்த்தியவர் ஸ்மித்.
தடையில்லாச் சந்தை, தடையில்லா போட்டி போன்றவற்றை வலியுறுத்தி, பொருளியலை தனிப் பாடமாகப் படிக்கக் காரணமான ஆடம் ஸ்மித் 1723-ம் ஆண்டு இதே நாள் தான் பிறந்தார்.
No comments:
Post a Comment