Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 17 June 2014

சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு எழுந்துள்ளது கடும்போட்டி

பொறியியல் கட்-ஆஃப் மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே 400 முதல் 500 பேர் இடம்பெற்றிருப்பதால் சிறந்த கல்லூரிகளின் பொறியியல் இடங்களுக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது.
பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் 195-க்கு கீழ் எடுத்துள்ளவர்களுக்கு சிறந்த பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினமாகியுள்ளது.
பிளஸ்-2 பொதுத் தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 90.6 சதவீத தேர்ச்சி விகிதத்தை தமிழகம் பெற்றதோடு, முக்கியப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பி.இ. படிப்புகளில் சேருவதற்கான கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. பிளஸ்-2 கணிதப் பாடத்தில் கடந்த 2013-ல் 2,352 பேர் 200-க்கு 200 எடுத்திருந்த நிலையில் 2014-ல் 3,882 பேர் 200-க்கு 200 எடுத்தனர்.
இயற்பியலில் 200-க்கு 200 எடுத்தது 2013-ல் 36 பேராக இருந்தது 2014-ல் 2,710 உயர்ந்தது.
 இதுபோல் வேதியியலில் 2013-ல் 1,499 பேராக இருந்தது, 2014-ஆம் ஆண்டில் 1693 பேராகவும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்பட்டது.  இதனால், 2014-15 கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர சிறந்த கல்லூரிகளுக்கு கடும் போட்டி இருக்கும் என உத்தேசிக்கப்பட்டது.
இது, அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிட்ட பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் உறுதியாகியுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலின்படி, 271 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்றுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 400 முதல் 500 பேர் இடம்பெற்றுள்ளனர். அதாவது, கட்-ஆஃப் 200 முதல் 199.75 வரை 500 பேர், 199.75 முதல் 199.50 வரை 500 பேர் என ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையேயும் 500 பேர் உள்ளனர்.
இதன் காரணமாக சிறந்த பொறியியல் கல்லூரி இடங்களுக்கு கடும் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண் 195-க்கு குறைவாக பெற்றவர்களுக்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைப்பது கடினம் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
பின்னுக்கு தள்ளப்பட்ட சாதனை மாணவர்கள்: பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் பி.இ. படிப்புகளில் சேருவதற்கான கணிதம், இயற்பியல், வேதியியல்  பாடங்களுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை மாணவர்கள் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் கே. சுந்தர் நடேஷ் பிளஸ்-2 தேர்வில் 1167 மதிப்பெண் பெற்றிருந்தபோதும் கட்-ஆஃப், பிறந்த தேதி மற்றும் சம வாய்ப்பு எண் அடிப்படையில் மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மட்டுமல்லாமல் பொறியியல் தரவரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண்ணில் இவரை விட அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments: