சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஜூலை 10-ஆம் தேதி இத்துறை தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் (அதாலத்) நடைபெற உள்ளது.
இது குறித்து சென்னை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைகள் தொடர்பான "பாவிஷ்ய நிதி அதாலத்' கூட்டம் ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி நடைபெற்று வருகிறது.
அதுபோல, ஜூலை 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் அதாலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காண ஜூன் 30-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் மனு அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment