Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 6 June 2014

தமிழக அரசின் கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்க அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்காக விணணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளதாவது:
 நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்(பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ, மாணவியருக்கு அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
 முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
 இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றுóம் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இத்திட்டங்கள் குறித்த விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments: