ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) நடத்தப்பட்ட கலந்தாய்வில் இரண்டு படிப்புகளிலும் மொத்தமுள்ள இடங்களில் 93 இடங்கள் நிரம்பியுள்ளன.
இரண்டு படிப்புகளிலும் சேர்த்து 49 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் நடத்தப்படும் பி.ஏ.,பி.எல். (ஹானர்ஸ்), பி.காம்.,பி.எல். (ஹானர்ஸ்) படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பி.ஏ.,பி.எல்.(ஹானர்ஸ்) படிப்பில் உள்ள 95 இடங்களில் 57 இடங்கள் நிரம்பின. 38 இடங்கள் காலியாக உள்ளன.
பி.காம்.,பி.எல். (ஹானர்ஸ்) படிப்பில் உள்ள 47 இடங்களில் 36 இடங்கள் நிரம்பின. 11 இடங்கள் காலியாக உள்ளன.
இரண்டு படிப்புகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 25-ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் இரண்டு படிப்புகளிலும் முதல் 10 ரேங்க்குகள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை கடிதத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி வழங்கினார்.
No comments:
Post a Comment