தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்காக இந்த ஆண்டு 5,500 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
இவற்றில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை காலை வரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சமர்ப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800 இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன.
இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.
கலந்தாய்வு எப்போது? இந்தப் படிப்பில் சேர இணையதளம் மூலமாக ஒற்றைச் சாளர கலந்தாய்வு பெரும்பாலும் ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment