தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஜூன் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மழைநீர் சேகரிப்பு வாரமாகக் கடைப்பிடித்து மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, மாநில பள் ளிக் கல்வி இயக்குநர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:
தமிழக முதல்வரின் ஆணைப் படி மழைநீர் சேகரிப்பதன் அவசி யத்தை வலியுறுத்தும் வகையில், அனைத்துவகை பள்ளிகளிலும் ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை மழைநீர் சேகரிப்பு வாரம் கொண் டாடப்பட வேண்டும்.முதல்கட்ட மாக, அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 9-ம் தேதி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணியை அந் தந்த பள்ளிகள் அமைந்துள்ள சுற்றுப் புற வட்டாரங்களில் நடத்த வேண்டும்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் பயன் களை மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகை பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஜூன் 10-ம் தேதியன்று பள்ளி அளவில் கட்டு ரைப் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளி கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அனைத்திலும் மாணவ, மாணவிக ளுக்கு ஜூன் 11-ம் தேதி ஓவியப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
தொடர்ந்து 13-ம் தேதியன்று வருவாய் மாவட்ட அளவில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் சார் பாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை யின் அடிப்படையில் உரிய விளக் கங்களுடன் மாதிரிகள் தயாரிக் கப்பட்டு கண்காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும். இதில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும்.
“மழைநீர் சேகரிப்பு, வளமான எதிர்காலம்” என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி கள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு மாவட்டங்களில் நடை பெறும் விழிப்புணர்வுப் பேரணி, கட்டுரை, ஓவியப் போட்டிகள் மற்றும் கண்காட்சி ஆகிய நிகழ்வு களின் புகைப்படங்களை அரசுக்கு அனுப்பிவைக்கும் வகையில், இம்மாதம் 20-ம் தேதிக்குள் தொடக் கக் கல்வி இயக்குநர் - பள் ளிக் கல்வி இயக்குநருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் அனுப்பி வைக்க வேண்டும். ஜூன் 26ல் மாநில அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்படும்.வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு சிறந்த ஓவியங்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment