Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 10 June 2014

தமிழகத்தில் 189 தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

தமிழகத்தில் தனியார் நடத்தி வந்த 189 தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர பிளஸ் 2 தகுதி மட்டுமே தேவை என்பதால், பலர் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு படித்து சீனியாரிட்டி அடிப்படையில் அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் புற்றீசல் போல் ஆசிரியர் பயற்சி நிறுவனங்கள் முளைத்தன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்கள் கட்டாயமாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணிக்கு அனுமதிக்கப்படுவர் என்ற ஆணையை அரசு பிறப்பித்துள்ளது. இதனால், நேரடியாக, பள்ளிகளில் சேரமுடியாத நிலை ஏற் பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர் சேர்க்கை குறைந்து, தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் தவிர, மற்றவை தனியாரால் நடத்தப்படுகின்றன. கடந்த, 2012ம் ஆண்டில் 683 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கின. இப்போது இவற்றில் 189 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது இயங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியல், விண்ணப்ப கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர், தகுதியான கல்வி நிறுவனங்களில் மட்டுமே சேர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: