கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக, மூட்டா யுஜிசி நெட் பயிற்சி வகுப்பு இயக்குநர் பேராசிரியர் ஜி.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது:
இத்தகுதித்தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். வரும் ஜூன் 29-ம் தேதி பல்வேறு மையங்களில் நாடு முழுவதும் கலை, கணிப்பொறி அறிவியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடங்களுக்கான யுஜிசி நெட் தேர்வு நடைபெறவுள்ளது.
யுஜிசி விதிமுறைகளின்படி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நிரந்தரப் பணியிடங்களுக்கு நெட் அல்லது செட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யுஜிசி நெட் தாள் ஒன்றுக்கான பயிற்சியை மூட்டா அமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது.
உயர்கல்வியில் அக்கறை கொண்ட பல்வேறு துறை பேராசிரியர்கள் மதிப்பூதியம் பெறாமல் இலவசமாக பயிற்சி வழங்கி வருகின்றனர்.
இந்த வகையில் மூட்டாவின் 22-வது மாலை நேர பயிற்சி வகுப்பு மே 26-ம் தேதி முதல் தினமும் மூட்டா அலவலகம், கதவு எண்.6, காக்காதோப்புத் தெரு, மதுரை-1 என்ற முகவரியில் நடைபெறும். இப்பயிற்சியில் சேர விரும்பும் கலை, கணிப்பொறி அறிவியல் மற்றம் எலக்ட்ரானிக்ஸ் பாட முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் சுயநிதி பிரிவு ஆசிரியர்கள் மூட்டா இணையதளமான -ல் அதற்கான படிவத்தை டவுன்லோடு செய்து வரும் மே 21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 94438 30200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிததுள்ளார்.
No comments:
Post a Comment