கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வுக்கான இலவச பயிற்சியை வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்துகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி செவ்வாய்க்கிழமை (மே 20) வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமன பதவிகளில் 2342 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு ஜூன் 14-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக (பொது) தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படுகிறது.
இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான சான்று, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகல்களுடன் மே 23-ஆம் தேதிக்குள் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை (பொது) தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment