Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 21 May 2014

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: ஜூன் 10 கடைசி நாள்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து தொடங்கி, 11 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆங்கிலம் (பொது), பொது அறிவு, சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணினி போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.500 உதவி தொகையாக அளிக்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம், இந்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டடம், 3-ஆவது தளம், எண் 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600004, தொலைபேசி: 044-24615112 என்னும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். மே 26 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை, இந்த மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான நேர்காணல் ஜூன் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிள் நடைபெறும் என்று பயிற்சி மற்றும் வழிகாட்டு மையத்தின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: