தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு பொறியியல் படிப்பை எளிமையாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழ்வழி பொறியியல் படிப்புகள், மாணவர்களுக்கு வினையாகிப்போகியுள்ளது.
பொறியியல் படிப்புகளில் தமிழ் வழிக் கல்வியை 2010-11 கல்வியாண்டில் தமிழக அரசு தொடங்கியது.
அண்ணா பல்கலைக்கழக பிரதான வளாகமான கிண்டி வளாகம் உட்பட அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ் வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அவற்றில் சேர்ந்த முதல் பிரிவு மாணவர்கள் இந்தாண்டுதான் பட்டப்படிப்பை முடித்து வெளிவருகின்றனர்.
1200ல் 7 பேருக்கு மட்டுமே பணி
அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள தமிழ் வழிப் பிரிவுகளையும் சேர்த்து சுமார் 1200 மாணவர்களில் வெறும் 7 பேருக்கு மட்டுமே வளாக நேர்காணலில் இடம் கிடைத்துள்ளது என்கின்றனர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள்.
பணிக்கு எடுக்க தயங்கும் நிறுவனங்கள்
தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் மீது பேராசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தியதாக மாணவர்கள் கூறினாலும் அவர்களுக்கு பணிவாய்ப்புகள் மறுக்கப்படுகிறதென்றே கூறுகின்றனர்.
தனியார் நிறுவனங்களின் நிலைப்பாடு இப்படியிருக்க, அரசுப் பணிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவற்றின் மூலம் நியமிக்கப்படும் பணிகள் தவிர மற்ற வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பணிநியமனங்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றன.
இதனால் ஒதுக்கீடுகள் இருந்தும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
தமிழகத்தில் தமிழ்வழிக்கு வழியில்லையா?
தமிழ்நாட்டில் தானே இருக்கிறோம் தமிழ்வழியில் பயின்றாலும் பணிகிடைக்கும் என நம்பிய மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தக்க நடவடிக்கையை உரிய நேரத்தில் அரசு எடுத்தால் மட்டுமே இந்த 1200 மாணவர்கள் மட்டுமின்றி இனிவரும் ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழி கிடைக்கும்.
No comments:
Post a Comment