கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க திட்டமிட்டிருப்பதாக கனரா வங்கி தலைவர் ஆ.கே. துபே தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துபே, மாணவர்களுக்கு கல்விக் கடன் எளிதாக கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
உரிய ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களும் தாமதம் இன்றி கிடைக்கும் என்றும் அவர் கூறினார். தொழில் முனைவோர் வளர்ச்சிக்காக சேலத்தில் தனி கிளை தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment