இந்திய ராணுவத்தின் புதிய தளபதியை நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதை அடுத்து, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சகாங்கை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் பிக்ராம் சிங்கின் பதவிக் காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைதை அடுத்து, புதிய தளபதியை நியமிக்கும் விவகாரம் எழுப்பப்பட்டது. இது குறித்து பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து, புதிய ரணுவ தளபதியை நியமிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது.
No comments:
Post a Comment