அரசு பாலிடெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 19) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக், புரசைவாக்கத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட தமிழகம் முழுவதும் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப கல்வி மையங்களில் வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பொதுப் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கிலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் ஜூன் 6 கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment