ரஷ்ய பேரரசின் கடைசி மன்னான இரண்டாம் நிக்கோலஸ், 1896-ம் ஆண்டு இதே நாளில்தான் ரஷ்ய மன்னராக முடிசூட்டிக் கொண்டார். விக்டோரியா மகாராணியின் பேத்தியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர். இவருடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்த நிலையில், உரிமைகளுக்காகப் போராடிய தொழிலாளர்கள் நசுக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக நடைபெற்ற போர், வறுமை மக்களை மேலும் நெருக்கியது.
1905-ம் ஆண்டு மன்னருக்கு எதிராக நடந்த தொழிலாளர் புரட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த புரட்சி ரத்த ஞாயிறு என்று குறிப்பிடப்படுகிறது. இறுதியில் புரட்சியின் மூலம், இரண்டாம் நிக்கோலஸின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கொடுங்கோல் ஆட்சி நடத்திய மன்னர், இறுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கா.அப்பாத்துரை மறைந்த தினம்
பன்மொழிப் புலவர் என அழைக்கப்படும் தமிழ் எழுத்தாளர் கா. அப்பாத்துரை 1907-ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்த அப்பாத்துரை, தென்னாட்டுப் போர்க்களங்கள், குமரிக்கண்டம், ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் போன்ற வரலாற்று நூல்களை எழுதியவர். இனம் மற்றும் மொழிகளில் தமிழரும், தமிழுமே முன்னோடி என்ற கோட்பாட்டை பல்வேறு ஆய்வுகள் மூலம் முன் வைத்தவர் கா. அப்பாதுரை
No comments:
Post a Comment