இணையதளங்கள் வழியாக பொருட்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருவதால், இணையதள வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 30 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இதன்மூலம் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கவுள்ளதாக முன்னணி மனிதவள மேம்பாட்டு நிறுவனமான ராண்ட்ஸ்டாட் இந்தியா தெரிவித்துள்ளது.
இணையதள வணிகத்தில் கடந்த சில மாதங்களாக போட்டி அதிகரித்து வருகிறது. அமேசான், ஃபிலிப்கார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சந்தையில் முக்கிய இடம் வகிக்கின்றன. இதையடுத்து, மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய இணையதள சந்தையில் இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment