பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான பிபா 1904-ம் ஆண்டு இதே நாள் ஆரம்பிக்கப்பட்டது. உலக அளவில் நடக்கும் முக்கியமான கால்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த அமைப்பிற்கே உள்ளது.
தொடக்கத்தில் 7 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்த இந்த அமைப்பில், தற்போது 209 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமையகம் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் உள்ளது. 1930-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது.
தத்துவஞானி பிளாட்டோ பிறந்த தினம்
மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாமல் இருக்க வேண்டும், அரசு பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும், அவர்களுக்கென்று சொத்துக்கள் இருக்கக் கூடாது என்று சொன்ன பிளாட்டோ கிமு 427-ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார்.
நீதி என்பது மனிதப் பண்பு எனச் சொன்ன பிளாட்டோ, சாக்ரடீஸின் முதன்மையான மாணவராவார். ஒரு குடியரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது குடியரசு நூலில் பிளாட்டோ தெளிவாக விவரித்திருக்கிறார்.
No comments:
Post a Comment