Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 13 May 2014

பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்தோர் மறுதேர்வு எழுத வரும் 16-ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்

பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தேர்வு எழுதுவதற்கு வருகிற 16-ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 தேர்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதோர், தேர்வு நடைபெற்ற நாளில் வருகை தராதோர் ஆகியோருக்கு சிறப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இத்தேர்வு வருகிற ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாளில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிற மாணவ, மாணவிகள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கும் நேரில் சென்று மே 12-ம் தேதி முதல், 16-ம் தேதிக்குள் ரூ.50 ரொக்கமாக செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக தனி விண்ணப்பங்கள் எதுவும் வழங்கப்படாது.
துணைத் தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.50ம் மற்றும் இதர கட்டணங்களாக ரூ.35ம் அந்தந்த பள்ளிகளில் செலுத்த வேண்டும். இதையடுத்து தேர்வு விவரங்கள் மற்றும் நுழைவு சீட்டுக்களை பதிவு இறக்கம் செய்வது தொடர்பாக கல்வித்துறை மூலம் பின்னர் குறிப்பிட்ட நாளில் அறிவிக்கப்படும். எனவே தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் துணைத் தேர்வு எழுதுவதற்கான இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments: