கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிடமிருந்து தேசிய விருதுக்கான விண்ணப்பங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வரவேற்கிறது.
கற்பித்தலில் புதுமையை புகுத்தி வரும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு ஆரம்பப் பள்ளிகளுக்கு 10 விருதுகள், இடைநிலைப் பள்ளிகளுக்கு 10 விருதுகள், ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களுக்கு மற்றும் பி.எட். கல்லூரிகளுக்கு 10 விருதுகள் என மொத்தம் 30 விருதுகள் வழங்கப்படும். கற்பித்தலில் பள்ளியில் சிறந்த மாற்றத்தை உருவாக்கிய திட்டங்களை அமல்படுத்திய பள்ளிகள், சிறந்த வகுப்பறை நிர்வாகத்தை அமல்படுத்தியுள்ள பள்ளிகள், விஞ்ஞான ரீதியிலான பாடத் திட்டத்தை வகுத்துள்ள பள்ளிகள் இவ் விருதுக்கு தங்களுடைய பரிந்துரைகளை அனுப்பலாம். பரிந்துரைகளை மைசூரில் உள்ள என்.சி.இ.ஆர்.டி.-யின் மண்டல கல்வி நிறுவனத்துக்கு அனுப்ப ஜூலை 31 கடைசி தேதியாகும்.
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள www.ncert.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment