Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 17 April 2014

-தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-கல்விக் கண்காட்சி: சனிக்கிழமை தொடக்கம்

-தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்- குழுமம் சார்பில் நடத்தப்படும் -எஜு ஃபேர் 2014- மாபெரும் கல்விக் கண்காட்சி சனிக்கிழமை (ஏப்.19) தொடங்க உள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாள்கள் (ஏப்ரல் 19 மற்றும் 20) நடைபெற உள்ள இந்த கல்விக் கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், கலை - அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் 70-க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைக்க உள்ளன.
இவற்றில் சில கல்வி நிறுவனங்கள் கண்காட்சியிலேயே உடனடி சேர்க்கை வசதியையும் அளிக்க உள்ளன.

அறிவியல் கண்காட்சி:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஒ)ஆய்வகமான போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிவியல் கண்காட்சி இந்த கல்விக் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
இதில் அந்த அமைப்பின் பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுவதோடு, இந்தத் துறையில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு தகவல்களும் அளிக்கப்படும்.
திறமையைக் கண்டறியும் தேர்வு:
மாணவர்கள் தங்களுடைய லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சி ஒன்றும், மாணவர்களின் திறமையைக் கண்டறியும் வகையிலான தேர்வு ஒன்றும் கண்காட்சியில் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் எந்தவிதக் கட்டணமும் இன்றி இந்த நிகழ்ச்சியிலும் தேர்விலும் பங்கேற்கலாம்.
மாணவர்களின் கண்டுபிடிப்புகள்:
பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
இந்த கண்டுபிடிப்புகள் செயல்படுத்திக் காட்டப்படுவதோடு, என்ன தொழில்நுட்பத்தில் அவை வடிவமைக்கப்பட்டன, அவற்றின் பயன் என்ன என்பன உள்ளிட்ட விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
இலவச பஸ் வசதி:
இந்த மாபெறும் கல்விக் கண்காட்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பதோடு, இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், கோயம்பேடு மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளிலிருந்து கண்காட்சி நடைபெறும் சென்னை வர்த்தக மையத்துக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச பஸ் வசதியைப் பெற விரும்புபவர்கள் 99444 25529 என்ற செல்பேசியைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 92824 38120, 92824 38185, 97896 67626 ஆகிய செல்பேசிகளைத் தொடர்புகொள்ளலாம்.
கண்காட்சி தொடக்க விழா சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன், போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் விஞ்ஞானி பி. சிவக்குமார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, மாதா கல்வி நிறுவனங்கள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ். பீட்டர், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளனர்.

No comments: