Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 17 April 2014

10ம் வகுப்பு அறிவியல் தேர்வு : தவறான கேள்விகளுக்கு 3 மதிப்பெண்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் கேட்கப்பட்ட 2 தவறான கேள்விகளுக்கு 3 மதிப்பெண்களை வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒரு மதிப்பெண் கேள்வி ஒன்றுக்கு இரண்டு பதில்கள் இருக்கும் நிலையில், எந்த பதிலை எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண்ணும், இரு மதிப்பெண் கேள்வியில் ஆங்கில வழி கேள்வித்தாளில் பயோ–பியூல் என கேட்டு தமிழ் வழி கேள்வித்தாளில் ‘உயிரி எரிபொருள்’ என கேட்காமல் பொதுவாக கேட்டு விட்டனர். இதற்கு மாணவர்கள், பெட்ரோல் அல்லது டீசல் என விடை எழுதினர். இதனால் மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது.
இந்த நிலையில் இந்த கேள்விக்கு எந்த பதில் எழுதியிருந்தாலும், அதற்கு 2 மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments: