சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கான 'வகுப்பறை மேலாண்மையில் உயர் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பிலான இருநாள் பயிற்சி மார்ச் 12,13 தேதிகளில் நடைபெற்றது.
பயிற்சியை பதிவாளர் என்.பஞ்சநதம் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியது: கல்வியாளர் ஒருவருக்கு 103 கற்பிக்கும் முறைகள் உள்ளன. கற்பித்தலில், வகுப்பறையில் நாம் பழைய முறைகளையே பின்பற்றினால் எதிர்காலத்தில் தொழில்நுட்பம், வகுப்பறையில் ஆசிரியர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாகிவிடும். எனவே நாம் வகுப்பறை சூழலில், தொழில் நுட்ப உபகரணங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கற்றுத்தந்தால் அந்த நிலை உருவாகாது. அதற்கு ஆசிரியர்கள் தங்களை தயார் செய்து கொள்ள இந்த பயிற்சி மிக உதவிகரமாக இருக்கும் என பஞ்சநதம் தெரிவித்தார்.
விழாவிற்கு கலைப்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். வாழ்நாள் கற்றல்துறை தலைவர் முனைவர் டி.ரங்கசாமி வரவேற்றார். பேராசிரியர் ஆர்.மயிலநாராயணன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் முனைவர் ஆர்.பாபு, எஸ்.ராஜசேகர், பி.என்.நடராஜ், எஸ்.கே.பெருமாள்பிள்ளை, நிகழ்வாளர்கள் ஆர்.மணிவாசகம், ஜே.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் பல்கலைக்கழகத்தில் உள்ள 29 துறைகளைச் சேர்ந்த 38 உதவிப் பேராசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
No comments:
Post a Comment