மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான பிரதான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வில் தமிழகத்திலிருந்து 260 பேர் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 1,080 பணியிடங்களுக்கான இந்திய குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
இந்தத் தேர்விலிருந்து பிரதான தேர்வுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே தகுதி பெற்றனர். இவர்களில் 914 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பிரதான தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.
பிரதான தேர்விலிருந்து இப்போது 3 ஆயிரத்து 3 பேர் வெற்றிபெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் சங்கர் கூறினார்.
இவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ன்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment