Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 12 February 2014

UPSC:UP தேர்வு எழுத கூடுதல் வாய்ப்பு

இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை (யுபிஎஸ்சி) அனைத்து பிரிவினரும் கூடுதலாக 2 முறை எழுதலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், 2014-ம் ஆண்டு முதல் அனைத்து பிரிவினரும் 2 முறை கூடுதலாக தேர்வு எழுதுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவையெனில், வயது வரம்பிலும் தளர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பு ஏற்கனவே 4 வாய்ப்புகளையும் பயன்படுத்திய 30 வயதிலான பொதுப்பிரிவை சேர்ந்தவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் 2013-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் UPSC தேர்வை பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக, 4 முறையும், ஓபிசி பிரிவினர் 7 முறையும், எஸ்சி எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள் எத்தனை முறைவேண்டுமானாலும் எழுதலாம் என அறிவித்திருந்தது.

No comments: