ஐ.எப்.எஸ். (இந்திய வனப்பணி) தேர்வு பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் குறித்து தமிழக மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் சென்னையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இலவச முகாம் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய வனப்பணி தேர்வு
தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிக எண்ணிக் கையில் வெற்றிபெறும் நோக்கில் தமிழக அரசு சென்னையில் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தை நடத்தி வருகி றது. இங்கு பயிற்சி பெறும் மாணவர் கள் அகில இந்திய பணிகளுக்கு அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படு கிறார்கள்.
ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு பாடத்திட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர் வாணையம் (யு.பி.எஸ்.சி.) சில மாறுதல்களைச் செய்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த புதிய பாடத்திட்டத்தின்படிதான் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
சென்னையில் இலவச முகாம்
அகில இந்திய பணியான ஐ.எப்.எஸ். தேர்வுக்கு, ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வோடு ஒருங்கிணைந்த தேர் வாக முதல்நிலைத் தேர்வு நடத்தப் படுகிறது. அதற்குப் பின்னர் பிரத்யேகமாக மெயின் தேர்வு நடத்துகிறார்கள். இந்த புதிய முறை குறித்து தமிழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் ஐ.எப்.எஸ். தேர்வு எழுத வசதியாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.
இதற்கான ஒருநாள் விழிப் புணர்வு முகாம் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பி.எஸ்.குமார சாமி சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் (அண்ணா மேலாண்மை நிலைய வளாகம்) வருகிற சனிக்கிழமை (பிப்ரவரி 15) நடத்தப்பட உள்ளது.
மின்னஞ்சல் மூலம் முன்பதிவு
ஐ.எப்.எஸ். தேர்வைப் பொருத்த வரையில், அறிவியல் பட்டதாரி களே இந்த தேர்வை எழுத முடியும். அண்ணா மேலாண்மை நிலையம் 250 மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஐ.எப்.எஸ். அதிகாரிகளும், அண்மையில் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றிபெற்றவர்களும் பயிற்சி அளிப்பார்கள்.
இந்த ஒருநாள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் aimchn@dataone.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்கள் பெயர், வயது, கல்வித் தகுதி, செல்போன் எண், முகவரி ஆகிய விவரங்களை செவ்வாய்க் கிழமைக்குள் (இன்று) பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
வாய்ப்பை நழுவ விடாதீர்கள்
முதலில் பதிவுசெய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 250 பேர் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கான அனுமதிச்சீட்டு மின்னஞ்சல் மூலமாக வழங்கப் படும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment