மாணவர்களே தேர்வு நேரம் உங்களை நெருங்குகின்றது. தேர்வுக்கு அதிகமாக படிக்க வேண்டி இருக்கும் அல்லவா... எப்படி உட்கார்ந்து படித்தால் அதிக நேரம் படிக்கலாம்?
குனிந்து வளைந்து உட்காரும் போது நம் நுரையீரல் சுருங்குவதால் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவும் அதன் மூலம் நம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும்.
இதனால் படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவோம். பிறகு நமக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று முடிவுக்கும் வந்துவிடுவோம். கொட்டாவி ஆக்ஸிஜன் குறைபாடுதானே தவிர ஆர்வக் குறைபாடு இல்லை.
எனவே நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள். சுவாசமும் சீராக இருக்கும். சோர்வும் சட்டென்று ஏற்படாது.
படுத்துக் கொண்டே படிக்க வேண்டாம்
பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படித்துக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கம் இருக்கும்.
சாப்பிட, குளிக்க, உறங்க என நம் உடல் ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ற நிலைகளில் செய்கிறது. உறங்கும் நிலையில் நாம் படித்தால் விரைவில் நம் உடல் உறக்கத்திற்கு தயாராகிவிடும். எனவே நீண்ட நேரம் படிக்க வேண்டும் என்றால் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள்......
No comments:
Post a Comment