Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 20 February 2014

புதிய பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா  19.2.2014 அன்று தலைமைச் செயலகத்தில், ஈரோடு மாவட்டம், மாத்தூரில் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், 99 கோடியே 74 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலகம்,  திருவள்ளூர் கல்வி வளாகக் கட்டடம் ஆகியவற்றை  திறந்து வைத்தார்.

No comments: