Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 22 February 2014

இன்று 498 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு

தமிழகம் முழுவதும் 498 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கும் ஆன்-லைன் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணையும் வழங்கப்படும். அதேபோல், தேர்வு செய்யப்பட்ட 152 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை பிற்பகலில் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments: